தமிழ்நாடு

மதுரை: வேலையிழந்த விரக்தி - விஷம் குடித்து மலை இடுக்கில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு

மதுரை: வேலையிழந்த விரக்தி - விஷம் குடித்து மலை இடுக்கில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு

kaleelrahman

மதுரையில் வேலையிழந்த விரக்தியில் விஷமருந்தி மலை இடுக்கில் சிக்கிய இளைஞரை தீயணைப்புத் துறையினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரை கீழக்குயில்குடி பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் காமராஜர் பல்கலைகழகத்தில் தற்காலிக அடிப்படையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடர் விடுப்பு எடுத்த காரணத்திற்காக அவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த விரக்தியில் நேற்று மதியம் வடபழஞ்சி அருகேயுள்ள குட்டைமலை எனும் மலைப்பகுதிக்குச் சென்று விஷமருந்தி உள்ளார். அதனால் சுயநினைவை இழந்த அவர் மலை இடுக்கில் சிக்கி இருந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திடீர்நகர் தீயணைப்புத் துறையினர் 2மணி நேரத்திற்கும் மேலாக போராடி, அவரை ஸ்ட்டெச்சரில் வைத்து கயிறு கட்டி கீழே கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரித்த நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர், அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.