பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் pt desk
தமிழ்நாடு

மதுரை| திமுக நிகழ்வில் வழங்கிய பிரியாணியை சாப்பிட்டவர்களுக்கு என்ன நடந்தது? மருத்துவர் சொன்னது என்ன?

webteam

செய்தியாளர்: செ.சுபாஷ்

கள்ளிக்குடி அருகே வில்லூரில் நேற்று திமுக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்ற பின் வந்திருந்த நிர்வாகிகளுக்கு பிரியாணி பார்சல் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த பிரியாணியை சாப்பிட்ட நூறுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு கள்ளிக்குடி, விருதுநகர், வில்லூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

Treatment

பொதுமக்களுக்காக தயார் செய்யப்பட்ட பிரியாணியை சாப்பிடுவதற்கு காலதாமதம் ஆனதால் உணவு விஷமாக மாறியுள்ளதும், அதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் வேறு ஏதும் பெரிய பாதிப்பில்லை எனவும் மருத்துவ வட்டாரத்தில் தகவல் தெரிவித்துள்ளன.

தற்போது வில்லூர் கிராமத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் பிரியாணி மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வில்லூர் அரசு மருத்துவமனை மருத்துவர் கூறுகையில்... நிகழ்ச்சி முடிந்த பின்பு உணவருந்தியவர்களுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்படவில்லை. நான்கு மணிக்கு மேல் உணவை சாப்பிட்டவர்களுக்கு மட்டும் இது போன்ற உபாதைகளுடன் சிகிச்சைக்கு வருவதாக தெரிவித்தார்.