மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகளுக்கான டெண்டர் நடைமுறை துவங்கியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளிவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர், மதுரை எய்ம்ஸ் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்தும் கட்டுமான பணிகள் எப்போது துவங்கும் என்பது குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், மதுரை எய்ம்ஸ் கடன் ஒப்பந்தமானது 26.03.21 அன்று இந்திய மற்றும் ஜப்பான் அரசுகள் இடையே கையெழுத்தானது எனவும் கடன் தொகை மதிப்பு 22.788 பில்லியன் ஜப்பானிஷ் யென் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 1536.91 கோடிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த திட்ட மதிப்பீடு 1264 கோடி எனவும் திட்ட மதிப்பீடு உயரும் வாய்ப்பு உள்ளதாகவும் இந்த திட்ட மதிப்பீடு உயர்வு அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது