தமிழ்நாடு

ஊரடங்கு காலத்தில் கொடுமை : ரேசன் உணவுப் பொருள்களை கடத்திய ஊழியர்கள்

ஊரடங்கு காலத்தில் கொடுமை : ரேசன் உணவுப் பொருள்களை கடத்திய ஊழியர்கள்

webteam

மதுரையில் நியாய விலைக்கடை ஊழியர்கள் உணவுப் பொருள்களை கடத்தும் வீடியோ அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

மதுரை சிம்மக்கல் முத்துஇருளப்பர் பண்டிதர் தெருவில் செயல்படும் நியாய விலைக் கடையில் இருந்து கடந்த 9 ஆம் தேதி அதிகாலை அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வாகனம் மூலம் கடத்தப்பட்டன. இந்தக் காட்சிகள் வலைத்தளங்களில் வேகமாக பரவின.

விசாரணையில் நியாய விலைக் கடையின் விற்பனையாளர் ஆனந்திக்கு இந்தக் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து, மதுரை மாவட்ட கூட்டுறவு சிறப்பங்காடி மேலாண்மை இயக்குனர் ஜீவா நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் இருப்பதால், ஏராளமான ஏழைகள் உணவுப் பொருள்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு அரசு முடிந்த வரை உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் ரேசன் கடை ஊழியர்களே உணவுப் பொருள்களை கடத்துவது அதிர்ச்சியையும், வருத்தமும் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.