மதுரை புளியங்குளம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மதுரை | “ஒரே ஒரு பேருந்துக்காக, நாள் முழுக்க காத்திருக்கோம்; அதிகாரிகளையும் தொடர்புகொள்ள முடியலை”

மாவட்ட எல்லைக் கோட்டில் இருப்பதால், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை என்றும், நலத்திட்டங்கள் எங்களைச் சேரவே இல்லை என்பதும் ஒரு கிராமத்தின் கூக்குரல்... உடனடியாக அரசு தலையிட வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள். எங்கே இது என்பதை தற்போது பார்க்கலாம்

PT WEB

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த புளியங்குளம், அந்த மாவட்டத்தின் எல்லையில் விருதுநகரை ஒட்டி இருக்கிறது. இதனால், தங்களுக்கான நலத் திட்டங்கள் அனைத்தும் எட்டாக் கனியாகி விடுகிறது என்கின்றனர் கிராம மக்கள். மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் தங்கள் கிராம மக்கள், கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் கைதொடும் தூரத்தில் இருக்கும் விருதுநகரைத் தான் நம்பி இருக்கிறோம் என்கின்றனர்.

மாவட்ட தலைநகரான மதுரைக்கு சென்றுவர ஒருநாள் பொழுது முடிந்துவிடுகிறது எனும் புளியங்குளம் மக்கள், போதிய குடிநீர் வசதி உள்ளிட்ட அரசின் எந்தவித திட்டங்களும் நிறைவாக கிடைப்பதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒரே ஒரு பேருந்தை நம்பி, தலைநகரை தொடர்புகொள்ள முடியாமல் வெகுதூரத்தில் இருக்கும் புளியங்குளம் மக்கள், அதிகார எல்லையால் மதுரை மாவட்டத்தில் இருக்கிறோம், மற்ற அனைத்துக்கும் விருதுநகரைத்தான் நம்பி இருக்கிறோம் என்கின்றனர். எல்லை வரையறை மூலம், மதுரையில் இருந்து விருதுநகரில் சேர்த்துவிட்டால் போதும் என்பதே அவர்களின் கோரிக்கை...