தமிழ்நாடு

விழிப்புணர்வுக்காக வடிவேல் மீம்ஸை கையில் எடுத்த மதுரை காவல்துறை: குவியும் பாராட்டு!

விழிப்புணர்வுக்காக வடிவேல் மீம்ஸை கையில் எடுத்த மதுரை காவல்துறை: குவியும் பாராட்டு!

webteam

வடிவேலு மீம்ஸை உருவாக்கி கொள்ளை, வழிப்பறி போன்ற மோசடி சம்பவங்களை தடுப்பது குறித்து மதுரை மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

சமூக ஊடகங்களில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் கொண்ட மீம்ஸ் இல்லாவிட்டால், சமூக ஊடகங்களே களை இழந்துவிடும் என்று கூறிவிடலாம். அந்த மீம்ஸை விழிப்புணர்வுக்காக பயன்படுத்துகிறது மதுரை மாவட்ட காவல்துறை.

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்த முயற்சியில் சமூக வலைதளங்களையும் பயன்படுத்த தொடங்கி இருக்கிறது காவல்துறை. மதுரை காவலன் என்ற செயலி மற்றும் மதுரை காவலன் என்ற பெயரில் உள்ள பேஸ்புக் பக்கம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

வடிவேலுவின் காமெடி காட்சிகளை மீம்ஸாக தயார் செய்து கொள்ளை, வழிப்பறி, பண மோசடி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பல்வேறு விழிப்புணர்வு மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வரும் மதுரை மாவட்ட காவல்துறைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவித்து வருகிறது