தூய்மை பணியாளர்கள் pt desk
தமிழ்நாடு

மதுரை | ”தீபாவளியை நாங்க கொண்டாடியதே இல்லை” – குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர்களின் தூய வாழ்க்கை!

தீபாவளியெல்லாம் கொண்டாடியதே இல்லை - குப்பைகளை அகற்றுவது தான் எங்கள் வேலை. மக்கள் பாதிக்கக்கூடாது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை மாநகராட்சியில் 1000-க்கும் மேற்ட்ட நிரந்தர தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறுதிக் கட்ட விற்பனை நான்கு மாசி வீதி மற்றும் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி நடைபெற்றது. இதனால் சித்திரை வீதிகளை சுற்றி அதிக அளவிலான குப்பைகள் மலைபோல் குவிந்து இருந்தன.

தூய்மை பணியாளர்கள்

இந்நிலையில், தீபாவளி பண்டிகையான இன்று அதிகாலை 4 மணிக்கே பணிக்கு வந்த மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றினர்.

தீபாவளியான இன்றும் கூட மக்களுக்கான முன்களப் பணியாளர்களாக தூய்மை பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியபோது, ”தீபாவளி பண்டிகையை கொண்டாடியதே இல்லை. வேலையெல்லாம் முடித்துவிட்டு நேரம் இருந்தால் கொண்டாடுவோம். மக்களுக்காக தான் இந்தப் பணியை செய்கிறோம். இது தான் எங்களுக்கு சந்தோஷம் என்றனர்.