தமிழ்நாடு

தெப்பத்திருவிழாவுக்காக வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

தெப்பத்திருவிழாவுக்காக வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

webteam

மதுரையில் பிரசித்தி பெற்ற தை தெப்பத் திருவிழாவிற்காக, மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தை திருவிழா தொடங்கியது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதையடுத்து மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாகவே தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தண்ணீர் நிரம்பியுள்ளதால், மின்னொளியில் வண்ணமயமாக காட்சியளிக்கிறது தெப்பக்குளம். இப்படி வண்ண விளக்குகளால் மின்னும் தெப்பக்குளத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை வலம்வந்து அம்மனும், சுவாமியும் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.