பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், ரயில்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய ரயில்வே துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே காவலர் வினோத் என்பவர் மது அருந்திய நிலையில் பெண் பயணியிடம் முறையற்ற வகையில் பேசியதாக கடந்த 2015ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்த போது, காவலர் வினோத் மீது துறைரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என்றும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
வினோத்தின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பெண்கள், முதியோர், குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், ரயில்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகளை குழு அமைத்து ஆய்வு செய்ய தென்னக ரயில்வேயின் பொது மேலாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.