தமிழ்நாடு

தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் என்ன ஆச்சு? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் என்ன ஆச்சு? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

rajakannan

தனியார் பள்ளிக் கட்டணத்தை முறைப்படுத்தி வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரையை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தொடர்ந்த வழக்கில், “தமிழகத்தில் உள்ள 10,000 தனியார் பள்ளிகளில் இதுவரை 5,500 பள்ளிகளுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 4,500 பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை உடனடியாக நிர்ணயித்து அரசு இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏப்ரல் 30ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை முறைப்படுத்தி அரசு இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலளருக்கு உத்தரவிட்டனர்.