தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கின் நிலை என்ன? : உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கின் நிலை என்ன? : உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

rajakannan

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கின் நிலை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

அமைச்சரான பிறகு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. ராஜேந்திர பாலாஜி சொத்துக் குவிப்பு தொடர்பாக மதுரை தல்லாக்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். 2011-13 ஆண்டு வரையில் சுமார் ரூ7 கோடி வரையில் சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்ததாக மகேந்திரன் தனது மனுவில் புகார் அளித்திருந்தார். அதனையடுத்து, ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 

இந்நிலையில், விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை வரும் 25ஆம் தேதி தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.