Madras high court pt desk
தமிழ்நாடு

சென்னை: அடிப்படை வசதிகள் இல்லாத மாநகராட்சி பள்ளி - அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தைச் சுற்றி புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்தும், பள்ளியில் குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாதது குறித்தும் அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

webteam

செய்தியாளர்: V.M.சுப்பையா

சென்னை, வியாசர்பாடி, கல்யாணபுரத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில், குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாதது குறித்தும், ஆய்வக பராமரிப்பின்மை குறித்தும் பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாகவும் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது.

இந்த செய்தியின் அடிப்படையில், அதிகாரிகளுக்கு உத்தரவிடும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

court new order

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, இதுசம்பந்தமாக இரண்டு வாரங்களில் பதிலளிக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சி, காவல் துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.