செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை மாநகர் வண்டியூர் டோல்கேட் பகுதியில் கடந்த 12 ஆம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, அதில், ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்க நகைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதனையடுத்து நகைகள் மற்றும் அதன் ஆவணங்கள் குறித்து வணிகவரி மற்றும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். நகைகளுக்கான ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை சரிபார்த்த அதிகாரிகள், பறிமுதல் செய்த தங்க நகைகளை உரியவரிடம் மீண்டும் ஒப்படைத்தனர்.