மதுரை ரயில் நிலையத்தில் சென்னை - போடி நாயக்கனூர் ரயில் இன்று காலை தீடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து நாள்தோறு போடி நாயக்கனூருக்கு ரயில் செல்கிறது. இது மதுரையில் 5 ஆவது நடைமேடையில் வந்து செல்லும். இந்தவகையில்தான், வழக்கம்போல புறப்பட்ட சென்னை - போடி நாயக்கனூர் ரயில் இன்று காலை மதுரை ரயில் நிலையத்தில் திடீரென தடம் புரண்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே பொறியாளர்களும், பணியாளர்களும் தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவளாத்தில் ஏற்படும் பணியை தீவிரமாக மேற்கொண்டனர்.
இதன் காரணமாக, தீபாவளியை முன்னிட்டு மதுரை வழித்தடத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.. இந்நிலையில், மாற்று ரயில்கள் மூலம் பயணிகள் அனுப்பப்பட்டனர்.
இது குறித்து ரயில் நிலைய அதிகாரிகளிடத்தில் கேட்டபோது, கடைசி பெட்டியாக இருக்க கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டிதான் தடம் புரண்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட காவல்துறையினர், ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.