தமிழ்நாடு

மதுரை: தகதகக்கும் தங்கம் விலையில் மனம் மயக்கும் மல்லிகைப்பூ - கிலோ ரூ.3500 விற்பனை

மதுரை: தகதகக்கும் தங்கம் விலையில் மனம் மயக்கும் மல்லிகைப்பூ - கிலோ ரூ.3500 விற்பனை

kaleelrahman

பொங்கலை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் 1 கிலோ மல்லிகை பூ ரூ. 3500-க்கு விற்பனையாகிறது.

தென் மாவட்டங்களின் பிரதான மலர் சந்தையாக விளங்கும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பொங்கலை முன்னிட்டு மல்லிகை பூ உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

நேற்று வரை கிலோ 2000 முதல் 2500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ விலை இன்று ஓரே நாளில் 1000 ரூபாய் விலை உயர்ந்து 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மல்லிகை வரத்து குறைவாலும் பண்டிகை காலம் என்பதாலும் விலை அதிகரித்துள்ளது.

அதேபோல் கனகாம்பரம் 1300 ரூபாய்க்கும், பிச்சிப் பூ 2000 ரூபாய்க்கும், முல்லைப்பூ 2000 ரூபாய்க்கும் மெட்ராஸ் மல்லி 2000 ரூபாய்க்கும், அரளி கிலோ 400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

தொடர்ந்து மூன்று நாட்களும் பண்டிகை என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைவாக இருப்பதால் விலையேற்றம் கண்டுள்ளது. ஆனாலும், மொத்த வியாபாரிகளும் பொதுமக்களும் பூக்கள் வாங்க குவிந்துள்ளனர்.