Protest pt desk
தமிழ்நாடு

மதுரை: "பாஜகவோடு சேர்ந்து திமுகவினர் கொலை முயற்சி" – துணை மேயர் பரபரப்பு குற்றச்சாட்டு

மதுரையில் திமுகவினர் பிஜேபி-யோடு கூட்டணி வைத்துக் கொண்டு அவதூறு பரப்புவதாகவும் போதை மாத்திரைகள் குறித்து புகார் அளித்ததால் கொலை செய்ய முயற்சித்ததாக மாநகராட்சி CPM துணை மேயர் புதிய தலைமுறைக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

webteam

நிருபர் - பிரசன்னா வெங்கடேஷ்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் நாகராஜன். மதுரை மாநகராட்சியின் துணை மேயராக உள்ள நாகராஜன், தனது மனைவி செல்வராணியுடன் நேற்று மாலை வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் மற்றும் அடையாளம் தெரியாது மூவர் கையில் வாளுடன் வந்து நாகராஜனை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். தன்னை தாக்க வருவதை உணர்ந்த துணை மேயர் நாகராஜன் அவர்களிடம் இருந்து தப்பித்துள்ளார்.

Deputy Mayor

இந்நிலையில், துணை மேயர் நாகராஜனின் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதோடு வீட்டிற்கு உள்ளே நுழைந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து துணை மேயரின் அலுவலக முன்பக்க கண்ணாடிகள் முற்றிலுமாக அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக துணை மேயர் நாகராஜன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார். அப்போது.. ”ஜெயந்திபுரத்தில் சர்வ சாதாரணமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இளைஞர்களுக்கு எளிதாக கிடைக்கிறது. இதுகுறித்து காவல் துறையிடமும், மாமன்ற கூட்டத்திலும் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அரசியல் பின்புலம் உள்ளது என்ற காரணத்தைச் சொல்லி ஏமாற்றி இளைஞர்களை கூலிப்படைனராக மாற்றி வருகிறார்கள்.

Deputy mayor office

இந்த பகுதியை சேர்ந்த திமுக வட்டச் செயலாளர் கண்ணன் மற்றும் அவரது சகோதரர் ஜெயராமன், பிஜேபி கட்சியைச் சேர்ந்த சில நபர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக தன் மீது அவதூறு பரப்பி வருவகின்றனர். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர், திமுக மாவட்டச் செயலாளரிடம் பலமுறை புகார் அளித்தும் தலைமையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களின் தூண்டுதலின் பேரிலேயே என்னை கொலை செய்ய முயன்றனர்” என்று குற்றம்சாட்டினார்

மேலும், ”எனது வீட்டில் இருந்து காவல் நிலையம் சிலர் தூர மீட்டர் தொலைவில் இருந்தும். நான் தாக்கப்பட்டது குறித்து காவல்துறையின் 100க்கு தொடர்பு கொண்டபோது தொடர்பு கிடைக்கவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்து பிறகு அரைமணி நேரம் கழித்துதான் சம்பவ இடத்திற்கு வந்தார்கள், காவல் ஆய்வாளரிடம் சொன்னதற்கு மீட்டிங்கில் இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், துணை மேயர் வீட்டு வாசலில் ரகளையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.