மதுரையில் பூக்களின் விலை வீழ்ச்சி - மல்லிகை பூ கிலோ ரூ. 150-க்கு விற்பனையாவதால் வியாபாரி வேதனை அடைந்துள்ளனர்.
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல சுபநிகழ்ச்சிகளுக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தையில் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த வாரம் 1 கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ, இன்று கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முல்லைப்பூ 200 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 200 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து 50, ரூபாய்க்கும் விற்பனை செய்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் வியாபாரிகளும் விவசாயிகளும் மிகுந்த வேதனை அடைந்தள்ளனர்.