தமிழ்நாடு

மதுரை: முகக்கவசம் இன்றி வந்தவர்கள் மூலம் எவ்வளவு வசூல் தெரியுமா..?

webteam

மதுரை மாவட்டத்தில் முகக்கவசங்கள் அணியாமல் வெளியே வந்த 502 பேரிடம் 59 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் பொது இடங்களில் பணிபுரியும் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் முகக் கவசம் அணியாமல் சாலையில் வாகனங்களில் வந்தவர்கள், நடந்து சென்றவர்களிடம் நேற்று அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில் மாநகராட்சி பகுதியில் 447 நபர்களுக்கும் , ஊரகப் பகுதியைச் சேர்ந்த 55 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடமிருந்து அபராத தொகையாக ரூபாய் 59 ஆயிரத்து 800 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எனவே பொதுமக்கள் தாங்கள் பணிபுரியும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் மு கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.