மதுரை சித்திரை திருவிழாவில் இன்று பச்சை பட்டுடுத்தி தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார்.
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம், தேர்திருவிழா ஆகியவை முடிவுற்ற நிலையில், பக்கதர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் கூட்டத்தின் மத்தியில் பச்சை பட்டுடுத்தில் தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். கொரோனா காரணமாக கடந்த இரண்டடு ஆண்டுகளாக இந்த வைபவம் நடைபெறாத நிலையில், இன்று நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து கள்ளழகரின் அருளாசியை பெற்றனர்.