தமிழ்நாடு

மதுரை திருவிழா, திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்குகள் : இன்று தீர்ப்பு

மதுரை திருவிழா, திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்குகள் : இன்று தீர்ப்பு

webteam

சித்திரை திருவிழாவுக்காக, மதுரையில் மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

ஏப்ரல் 18ஆம் தேதி சித்திரை விழாவின் தேரோட்டம் நடைபெறும் என்பதால், மதுரையில் நாடாளுமன்ற தேர்தலை தள்ளி வைக்கக் கோரி, வ‌ழக்கறிஞர் பார்த்தசாரதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிப்பதாக, தேர்தல் ஆணையம் சார்பில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வின் முன் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

சென்னையில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசின் முடிவைக் கேட்ட பிறகே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வாக்குப்பதிவுக்கு கூடுதல் நேரம் மட்டுமே வழங்க முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இதேபோல, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கிலும் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.