தமிழ்நாடு

மதுரை: வேலை கிடைக்காத விரக்தியில் பொறியியல் பட்டதாரி எடுத்த விபரீத முடிவு

மதுரை: வேலை கிடைக்காத விரக்தியில் பொறியியல் பட்டதாரி எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

மதுரையில் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டாள்புரம் பகுதியில் அக்ரினி அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அந்த குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வுபெற்ற சுங்கத் துறை அதிகாரி வெங்கட சுப்பிரமணியன் என்பவரின் ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி (33). எம்.இ பட்டதாரியான இவருக்கு வேலை கிடைக்காததால் கவலையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் மன விரக்தியடைந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த சுப்பிரமணியபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)