வில்லூர் அருகே கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் மற்றும் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத் துறை உதவி பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் அனந்தகுமரன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் வில்லூர் அருகேயுள்ள சித்தூரில் மேற்பரப்பு கள ஆய்வு செய்தனர்.
அப்போது கண்மாய் கரையில் பாதி புதைந்த நிலையில் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் மற்றும் கி.பி 16ம் நூற்றாண்டு நடுகல் ஆகியவை கண்டறியப்பட்டன.