தமிழ்நாடு

மதுரை: குடியிருப்புக்குள் புகுந்த 10அடி நீள மலைப்பாம்பு - லாவகமாக பிடித்த இளைஞர்கள்

மதுரை: குடியிருப்புக்குள் புகுந்த 10அடி நீள மலைப்பாம்பு - லாவகமாக பிடித்த இளைஞர்கள்

kaleelrahman

மேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து கோழி மற்றும் முட்டைகளை விழுங்கி வந்த மலைப்பாம்பை பிடித்த இளைஞர்கள், பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கச்சிராயன் கல்லம்பட்டியில் கடந்த சிலநாட்களாக, வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த கோழி மற்றும் முட்டைகள் காணாமல் போயின, இந்நிலையில் இன்று காலை அப்பகுயில் உள்ள குடியிருப்புக்கு அருகே உள்ள புதரில் மலைப்பாம்பு ஒன்று செல்வதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் அதை லாவகரமாக பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து பிடிப்பட்ட மலைப்பாம்பை சாக்கில் போட்டு கட்டியதுடன், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திறகு வந்த கொட்டாம்பட்டி வனத்துறையினர் பிடிப்பட்ட 10அடி நீளமுள்ள மலைப்பாம்பை பத்திரமாக கொட்டாம்பட்டி அருகேயுள்ள வனப்பகுதியில் விட்டனர்.

குடியிருப்பு பகுதியில் கோழி மற்றும் முட்டைகளை விழுங்கி வந்த மலைப்பாம்பு பிடிப்பட்டது, அப்பகுதி மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.