தமிழ்நாடு

மதுரை: பத்திரமாக அனுப்ப வேண்டிய பார்சல்களை பந்தாடும் தபால் ஊழியர்

மதுரை: பத்திரமாக அனுப்ப வேண்டிய பார்சல்களை பந்தாடும் தபால் ஊழியர்

webteam

மதுரை ரயில் நிலைய நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு பார்சல்களை தூக்கி எரியும் தபால் ஊழியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை ரயில் நிலையத்தில் இயங்கி வரும் இந்திய தபால் நிலையத்தின் மூலம் பொதுமக்கள் அனுப்பும் தபால்கள் மற்றும் பார்சல்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அதேபோல் மத்திய மாநில அரசின் முக்கியமான தபால்கள் மற்றும் ஏடிஎம் கார்டு, பான் கார்டு மற்றும் அத்தியாவசிய மருந்துகளும் விரைவு தபாலில் அனுப்பப்படுகிறது. பார்சல்களை ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு ட்ராலி மூலமாக எடுத்துச் செல்லாமல் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு பார்சல்களை ஊழியர் தூக்கி வீசுகிறார்.


தபால் ஊழியரின் இந்த செயலை அங்கிருந்து பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டபோது வீடியோ பதிவை வைத்து ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளது.