SenthilBalaji pt web
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

webteam

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் ஜாமின் கோரி இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது.

SenthilBalaji ED

இந்நிலையில், கடந்த 14, 15 மற்றும் 21ஆம் தேதிகளில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இன்று காலை 10.30 மணிக்கு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு வழக்கில் தீர்ப்பளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.