LokSabhaElection BJP pt desk
தமிழ்நாடு

பாஜகவின் தாமரை சின்னம் மீதான வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

தேசிய மலரான தாமரையை, பாரதிய ஜனதா கட்சியின் சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், இன்று (புதன்) அறிவிக்க உள்ளது.

webteam

செய்தியாளர்: முகேஷ்

தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது எனக் கூறி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான காந்தியவாதி ரமேஷ் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

madras high court

அந்த மனுவில், “பாரதிய ஜனதா கட்சிக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து, பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “தாமரை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும் அதை மாநில சின்னமாக அறிவித்துள்ளன. மேலும் தாமரை ஒரு மதத்தின் முக்கிய அடையாளம் என்பதால், பா.ஜ.வுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படியும் தவறு மட்டுமல்லாமல், அரசு சின்னங்களில் தாமரை இடம் பெற்றுள்ளதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது” என சுட்டிக்காட்டப்பட்டது.

bjp symbol

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மார்ச் 5ஆம் தேதி மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை 10:30 மணியளவில் அறிவிக்க உள்ளது