சென்னை உயர்நீதிமன்றம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சீமான் மீதான வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

கடந்த 2018-ம் ஆண்டு சென்னை தரமணியில் நடந்த தமிழர் எழுச்சி கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழம் பற்றியும், மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் நிலவும் சூழல் குறித்தும், நியூட்ரினோ திட்டம், சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசினார்.

இதையடுத்து, இரு பிரிவினருக்கு எதிராக மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக தரமணி போலீசார் பதிவுசெய்த வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சீமான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  

இதை எதிர்த்து சீமான் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.