தமிழ்நாடு

“ஆன்மிக பூமி பாலியல் வன்கொடுமை பூமியாகிவிட்டது” - நீதிபதி வேதனை

rajakannan

ஆன்மிக பூமியான இந்த மண் பாலியல் வன்கொடுமை பூமியாகிவிட்டது என்று நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார். 

60 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி கிருபாகரன், ‘காம மிருகங்கள் குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு சமூகம், குற்றத்தில் ஈடுபடுவோரின் உளவியல் ரீதியான பிரச்னையே காரணம்’ என்றார்.

இதனையடுத்து, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு பற்றி ஆகஸ்ட் ஒன்றில் மத்திய அரசு பதில் தர நீதிபதி உத்தரவிட்டார். அதோடு, பதில் அளிக்காவிடில் மத்திய, மாநில உள்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் அவர் கூறினார்.