தமிழ்நாடு

ஐபிஎஸ் அதிகாரிக்கே இவ்வளவு சிக்கலென்றால் சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன?- உயர் நீதிமன்றம்

ஐபிஎஸ் அதிகாரிக்கே இவ்வளவு சிக்கலென்றால் சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன?- உயர் நீதிமன்றம்

Sinekadhara

ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது சென்னை உயர் நீதிமன்றம். அப்போது ஐபிஎஸ் அதிகாரியே புகார்தர இவ்வளவு சிரமம் என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு நடந்துள்ள பாலியல் துன்புறுத்தல் விவகாரம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎஸ் அதிகாரியே புகார்தர இவ்வளவு சிரமம் என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? எனவே பெண் அதிகாரி புகார் கொடுத்ததை வைத்து அரசியல் செய்யவேண்டாம். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை வெளியிடவோ, பயன்படுத்தவோ கூடாது என அறிவுத்தியுள்ளது.

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/CkDbAWXp0t8" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

மேலும் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் எனவும், விசாரனையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தரவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றவும் பரிந்துரைத்துள்ளது.