தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை பிற பள்ளிகளில் சேர்க்க அனுமதிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. அதன்படி, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி மாற்று சான்றிதழ் வழங்காமல் இருக்கக்கூடாது என்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகள் குறித்த புகார்கள், நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.