Madras high court pt desk
தமிழ்நாடு

நீதித்துறை நெறிமுறைகளை நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை

"பொதுமக்களின் நம்பிக்கையை தொடர்ந்து உறுதி செய்யும் விதமாக நீதித்துறை நெறிமுறைகளை நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

webteam

செய்தியாளர்: வி.எம்.சுப்பையா

சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதி ராமன் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாவட்ட அளவில் பணியாற்றும் அனைத்து நீதிபதிகளும், நீதியை மட்டும் நிறைவேற்றாமல், நீதித் துறையின் பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மூலம் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும்.

Judges

நீதிபதிகள் தனிப்பட்ட முறையிலோ, அலுவல் ரீதியாகவோ, நீதித் துறையின் நம்பகத்தன்மையை சிதைக்கும் விதமாக செயல்படுவதை தவிர்க்க வேண்டும். நீதிபதிகள், தாங்கள் பணியாற்றும் நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்களுடன் நெருக்கமான நட்புடன் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

நீதிபதிகள், பொதுமக்களின் பார்வையில் இருக்கிறோம் என்று எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் செல்போனிலும், தன்னுடைய சேம்பரில் வைத்தும் பேசுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், பணி நேரத்தில் நீண்ட நேரம் மொபைல் போனில் பேசுவதையும் தவிர்க்கவேண்டும்.

மொபைல் போன்கள்

இந்த நெறிமுறைகளை அனைத்து நீதிபதிகளும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்” என்று கூறப்பட்டுள்ளது.