சிறிய குற்றங்களுக்காக கடைநிலை ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், உயரதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வேலூர் சிறையில் ஆயுள் கைதி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அரசுத் தரப்பில் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கில் தொடர்புடைய சிறைத்துறை டிஐஜி உள்ளிட்டோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சிறை அதிகாரிகள் மீதான புகார்களை கண்டித்தனர்.
சிறிய குற்றங்களுக்காக கடைநிலை ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், உயரதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.