தமிழ்நாடு

"வேதா நிலையத்தை திறக்கலாம்; ஆனால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை" - உயர் நீதிமன்றம்

"வேதா நிலையத்தை திறக்கலாம்; ஆனால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை" - உயர் நீதிமன்றம்

Sinekadhara

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசு திறக்கலாம்; ஆனால், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றி, தமிழக அரசு நாளை திறக்கிறது. ஆனால் ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்கியதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெ.தீபக் வழக்கு தொடர்ந்தனர். அதில் வேதா இல்ல பொருட்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அரசு அவசரமாக கையகப்படுத்தியுள்ளதாக தீபக் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததையும் எடுத்துரைத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேசஷாயி, சென்னை போயஸ் கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலதா நினைவு இல்லத்தை திறக்க தடையில்லை; ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.