தமிழ்நாடு

`திருமணத்தின் நோக்கமே சந்ததியை உருவாக்குவதுதான்; உடல் இன்பம் அல்ல’-சென்னை உயர்நீதிமன்றம்

`திருமணத்தின் நோக்கமே சந்ததியை உருவாக்குவதுதான்; உடல் இன்பம் அல்ல’-சென்னை உயர்நீதிமன்றம்

webteam

திருமணத்தின் அடிப்படை நோக்கமே சந்ததியை உருவாக்குவது தானே தவிர, உடல் இன்பத்துக்கு மட்டுமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் கணவனை விட்டு பிரிந்த மனைவியொருவர், தனது இரு மகன்களையும் தன்னிடம் ஒப்படைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகிருஷ்ணன் ராமசாமி, குழந்தைகளை தங்கள் வசம் ஒப்படைக்க கோரி வழக்கு தொடரும் பிரிந்த தம்பதியரால் குழந்தைகள் தீய உலகத்திற்குள் கொண்டு செல்வதாக வேதனை தெரிவித்துள்ளார்.

திருமணம் என்பது சந்ததியினரை உருவாக்கத் தானே தவிர, உடல் இன்பத்திற்காக மட்டும் அல்ல என்றும், குழந்தைகளை தாயிடமிருந்து பிரிப்பது அவர்களை துன்புறுத்தும் செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு குழந்தையை அதன் பெற்றோருக்கு எதிராக திருப்புவது என்பது தனக்கு எதிராக திருப்புவதை போன்றதாகும் என்றும், இது ஒரு மனிதாபிமானமற்ற செயல் மட்டுமின்றி, குழந்தைக்கு தீங்கு விளைவிப்பதாகும் எனக் கூறி, இரு குழந்தைகளையும் தாயின் தற்காலிக கட்டுப்பாட்டில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்.