Madras High Court pt desk
தமிழ்நாடு

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கியது ஏன்? விஷச்சாராய வழக்கில் நீதிமன்றம் கேள்வி

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மீண்டும் ஏன் பணிவழங்கப்பட்டது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள்து.

webteam

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி சென்னை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உள்ளூர் அரசியல்வாதிகள் காவல்துறையினர் தொடர்பு இல்லாமல் சாராய விற்பனை செய்திருக்க முடியாது” என வாதிட்டார். கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்டவை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதையும் சுடிக்காட்டினார்.

Kallakurichi

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதால் சிபிஐக்கு மாற்ற அரசு பயப்படுகிறது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நீதிபதி பாலாஜி ஆகியோர் கொண்ட அமர்வு, “மாவட்டம் தோறும் சாராயம் காய்ச்சுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும்” என உத்தரவிட்டனர்.

மேலும், “இந்த விவகாரத்தில் பணியிடை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மீண்டும் ஏன் பணி வழங்கப்பட்டது?” என்றும் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் கேள்வி எழுப்பினார்.