தமிழ்நாடு

பத்திரப்பதிவு தடை உத்தரவு தளர்வு

பத்திரப்பதிவு தடை உத்தரவு தளர்வு

webteam

விவசாய நிலங்களை வீட்டுமனையாக பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னர் வீட்டு மனைகளாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறு பத்திரப் பதிவு செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்களை வீட்டு நிலங்களாக மாற்றுவது தொடர்பான வழக்கில் இந்த உத்தரவை தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு பிறப்பித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை விளைநிலங்களாக மாற்றுவதற்கு கடந்தாண்டு செப்டம்பர் 9ம் தேதி தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வீட்டுமனைகளை முறைப்படுத்தும் விவகாரத்தில் உறுதியான கொள்கை முடிவு உருவாக்கப்பட்டு வருவதாகவும் இதை சமர்ப்பிக்க ஒரு வார அவகாசம் வேண்டும் என்றும் தமிழக அரசுத் தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் போது 22 அடி சாலை, குடிநீர் உள்ளிட்ட விதிகள் மீறப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.