ஹெச்.ராஜா கோப்புப்படம்
தமிழ்நாடு

“ஹெச்.ராஜா இதுபோன்று பேசுவது முதன்முறையல்ல; இதை ஏற்றுக்கொள்ள முடியாது”- சென்னை உயர்நீதிமன்றம்

பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

PT WEB

கடந்த 2018-ஆம் ஆண்டு வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், அவர்களின் குடும்ப பெண்கள் குறித்தும் மற்றும் திமுக எம்.பி கனிமொழி குறித்தும் அவதூறாக பேசியதாக பாஜக-வை சேர்ந்த H ராஜாவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா தாக்கல் செய்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு தற்போது விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “ஹெச்.ராஜா இதுபோன்று பேசுவது முதன்முறையல்ல. பெண்கள் குறித்து குற்றச்சாட்டுகள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டார். மேலும் மனுக்கள் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.