தமிழ்நாடு

விமான நிலைய சுற்றுச்சுவர் 50 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்தது

விமான நிலைய சுற்றுச்சுவர் 50 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்தது

webteam

மதுரை விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளது.

மதுரை பகுதியில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருவதால், விமான நிலைய உள்பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேற முடியாமல் பெரும் அளவில் தேங்கியது. இதனால் மதுரை - தூத்துக்குடி முக்கிய சாலையில் 50 அடி தூரத்திற்கு மதுரை விமான நிலைய சுற்றுசுவர் இடிந்து விழுந்தது.

இதனையடுத்து அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளுர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுசுவர் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் புதிதாக சுற்றுசுவர் கட்ட உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய இயக்குநர் ராவ் தெரிவித்துள்ளார்.