தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்துக்கு நீதிகேட்டு சென்னையில் மாதர்சங்கம் போராட்டம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்துக்கு நீதிகேட்டு சென்னையில் மாதர்சங்கம் போராட்டம்

webteam

கள்ளகுறிச்சி பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டம் இன்றும் நடைபெற்றது. இப்போராட்டத்தின் காரணமாக ஆர். கே. சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாதர் சங்கம் சார்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தை கள்ளகுறிச்சி பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தார். இதனை அறிந்த போலீசார், முற்றுகை போராட்டத்திற்கு வரும் நபர்களை முன்கூட்டியே கைது செய்தனர். மேலும் டிஜிபி அலுவலகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாதர் சங்க நிர்வாகிகள் சென்னை ஆர். கே. சாலையில் இருக்கும் கல்யாணி மருத்துவமனை அருகே திடீர் என்று 50 க்கும் மேற்பட்ட நபர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 70 க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர்.

போராட்டத்தில் பங்கேற்று பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த நிர்வாகி வாசுகி, “கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு விசாரணையை அரசு துரிதப்படுத்த வேண்டும். மாணவியின் மரணத்தை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் பதிந்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்யவேண்டும். மேலும் மாணவியின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.