தமிழ்நாடு

உடைந்து விழும் நிலையில் மதகுப்பாலம்....! புதிய மேம்பாலத்தை திறக்கக் கோரிக்கை

உடைந்து விழும் நிலையில் மதகுப்பாலம்....! புதிய மேம்பாலத்தை திறக்கக் கோரிக்கை

webteam

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஏரிக்கரை பகுதியில் உடைந்து விழும் நிலையில் உள்ள ஆனை மதகு பாலத்தை சீரமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மாற்று ஏற்பாடாகவும் ஆனை மதகு பாலம் அருகே ஆசனூர் சாலையில் வேறு ஒரு மேம்பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலை துறையினர் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த பால பணிக்காக அருகில் தற்காலிக சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

மேம்பாலம் பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கபடாததால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் கடுமையான போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. ஆகையால் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைதுறை உடனடியாக நடவடிக்கை எடுத்து திருக்கோவிலூர்-ஆசனூர் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.