தமிழ்நாடு

பகலில் கட்டப்பஞ்சாயத்து; இரவில் மதுபான விடுதி - சிறுவர் பூங்காவின் அவலம்

பகலில் கட்டப்பஞ்சாயத்து; இரவில் மதுபான விடுதி - சிறுவர் பூங்காவின் அவலம்

webteam

ராமநாதபுரம் அருகே உள்ள சிறுவர்கள் பூங்கா, பகலில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாகவும், இரவில் மதுபான விடுதியாகவும் மாறும் அவலநிலை அரங்கேறி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சிறுவர்கள் விளையாடுவதற்கான பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா, பகலில் கட்டப்பஞ்சாயத்து நடக்கும் இடமாகவும், இரவில் மது அருந்தும் விடுதியாகவும் மாறியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்கா, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பராமரிப்பு இல்லாததால், பயனற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கமுதி பேரூராட்சி நிர்வாகம், விரைவில் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.