தமிழ்நாடு

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

jagadeesh

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத்‌ தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா‌ ‌அருகே கரையை க‌டந்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுர‌ம், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தின் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலும் வட தமிழகத்தில் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரையிலும் கடலில் அதிக உயரத்திற்கு அலைகள் எழும் என்பதால் இரு நாட்களுக்கு மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது