அரபிக்கடல் பகுதியில் வரும் 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்கிழக்கு, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகும்.
கிழக்கு திசை காற்று தமிழகத்தினூடே செல்ல வாய்ப்புள்ளதால் பருவமழைக்கான சூழலும் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.