காற்றழுத்த தாழ்வு பகுதி புதிய தலைமுறை
தமிழ்நாடு

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... எப்போது மழை? விரிவான விவரம்!

தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக, நவ 25ல் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் நவ.27ல் விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.