காற்றழுத்த தாழ்வுப்பகுதி புதிய தலைமுறை
தமிழ்நாடு

உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி! எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

அரபிக்கடல் பகுதியில் 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்திருந்தது. இந்தநிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ”தென் கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்து வட மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாகவே, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதை காண முடிகிறது. எனவே, இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.