தண்டவாளத்தில் சிக்கிய லாரி pt desk
தமிழ்நாடு

அரக்கோணம்: தண்டவாளத்தில் சிக்கிய லாரி... காலதாமதமாக சென்ற ரயில்கள்... பயணிகள் அவதி

அரக்கோணம் சென்னை மார்க்கத்தில் கிராசிங் கேட்டில் சென்ற லாரி, திடீரென தண்டவாளத்தில் சிக்கி நின்றதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

webteam

செய்தியாளர்: எழில் கிருஷ்ணா

அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் வேப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கும் திருநின்றவூர் ரயில் நிலைத்திற்கும் இடையே உள்ள லெவல் கிராசிங் கேட் வழியாக கனரக லாரி ஒன்று கடந்து செல்ல முயன்றுள்ளது. அப்போது தண்டவாளத்தில் லாரி சிக்கிக் கொண்டது. இதையடுத்து லாரியை எடுக்க முடியாமல் ஒட்டுநர் திணறியுள்ளார். இது குறித்து திருவள்ளூர் ரயில்வே காவல் துறைக்கு தகவல் கிடைத்த நிலையில், ரயில்வே ஊழியர்கள் லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Train

இதைத் தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. லாரி அப்புறப்படுத்தப்பட்ட பின்பு, அனைத்து ரயில்களும் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். இந்த ரயில் மார்க்கத்தில் அனைத்து விரைவு ரயில்களும் அரைமணி நேரம் காலதாமதமாக செல்கின்றன.