செங்கோட்டை அருகே தண்டவளாத்தில் விபத்துக்குள்ளான லாரி pt desk
தமிழ்நாடு

தென்காசி: தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி - ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

செங்கோட்டை அருகே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்தார். ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

webteam

செய்தியாளர்: ஈஸ்வரமூர்த்தி

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ப்ளைவுட் ஏற்றி வந்த லாரி இன்று அதிகாலை தமிழக கேரளா எல்லையான புளியரை எஸ் வளைவு அருகே வந்துள்ளது. அப்போது ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தண்டவாளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தண்டவளாத்தில் விபத்துக்குள்ளான லாரி

இதுகுறித்து தகவலறிந்ததும் மதுரையில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்பட்ட சோதனை ரயில், பகவதிபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதே போன்று சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் விரைவு ரயில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி அகற்றப்பட்ட நிலையில், கொல்லம் ரயில் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

காவல்துறை மற்றும் ரயில்வே ஊழியர்களின் சாமர்த்தியத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. இதே பகுதியில் கடந்த வருடம் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.