தமிழ்நாடு

ரன்வீர் ஷாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

ரன்வீர் ஷாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

webteam

சிலைக் கடத்தல் விவகாரத்தில் சிக்கி இருக்கும் தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலமையில் சிலை கடத்ததல் தடுப்பு பிரிவு போலீசார் தமிழகத்தில் காணமல் போன சிலகளை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் சிலை கடத்ததல் தொடர்பாக சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் சோதனை மேற்கொண்டதில் 60 சிலைகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பண்ணை வீடு போன்ற இடங்களில் சோதனை மேற்கொண்டதில் மேலும் பல சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் விலை 125 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். 

ரன்வீர்ஷாவுக்குச் சொந்தமான வீட்டிலும், பண்ணை வீட்டிலும் ஏராளமான சாமி சிலைகள் மற்றும் கலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அளித்துள்ளனர். மேலும் தொழிலதிபர் ரன்வீர்ஷா வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரன்வீர்ஷாவிடம் இருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட கோவில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.