பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பு லோக் ஆயுக்தா. அதன்படி தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான தேர்வுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் பங்கேற்று லோக் ஆயுக்தா தேர்வுக்குழு குறித்து ஆலோசித்தனர். விரைவில் தேடல்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டார்.
மேலும் தேடுதல் குழுவின் உறுப்பினராக முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியும், ஒரு உறுப்பினராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஏ.பாரியும் நியமனம் செய்யப்பட்டனர். அந்த ஆணையம் 5 பேர் கொண்ட லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உறுப்பினர்களை தேர்வு செய்து அறிக்கை அளிக்கும். அதனை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்து லோக் ஆயுக்தா அமைப்பதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுப்பார்
லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், விசாரித்த முக்கிய வழக்குகள்: