தமிழ்நாடு

அடைத்துவைத்து சோறும் காசும் கொடுக்குறாங்க: இது 30 நாள் வேலை திட்டம் - சுயேட்சை பரப்புரை

அடைத்துவைத்து சோறும் காசும் கொடுக்குறாங்க: இது 30 நாள் வேலை திட்டம் - சுயேட்சை பரப்புரை

webteam

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்; போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பெண் வாக்காளருக்கு ஆசீர்வாதம் வழங்கி காமெடியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் அனல்பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர், காட்டுமிராண்டி வருகிறார் வருகிறார் என பொதுமக்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது பெண்களுக்கு ஆசீர்வாதம்; வழங்கி பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 100 நாள் வேலை திட்டம் போல், 30 நாள் வேலை திட்டம். அனைவரையும் அடைத்து வைக்கிறார்கள். உணவும் பணமும் கொடுக்கிறார்கள். பொது மக்களுக்கு இந்த ஒரு மாதம் வேலை வாய்ப்பு கொடுக்கக்கூடிய தேர்தல் என கிண்டலாக பேசினார். காவி உடை, கண்ணில் கூலிங் கிளாஸ் உடன் தன்னுடைய காலிபிளவர் சின்னத்தை ஜிப்பில் கட்டிக் கொண்டு வினோதமான பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பரப்புரையில் வாக்காளர்களை கவர ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு விதமான பரப்புரையை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.